அமெரிக்கா டாலரின் மதிப்பு தொடர்ந்து ஆதிக்கம் பெற்று வரும் நிலையில் பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கிடையில் ஐரோப்பா மீண்டும் கிரிப்டோகரன்சி மீது புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்நிலையில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக எற்றுகொண்ட எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயீப் புகேலே 44 நாடுகளைப் பிட்காயின் ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
எல் சால்வடார்
எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே ஞாயிற்றுக்கிழமை, பிட்காயின் பற்றி விவாதிக்க 44 நாடுகளின் பிரதிநிதிகளை இந்த வாரம் அந்நாடு நடத்தும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்திற்குக் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
44 நாடுகள்
32 மத்திய வங்கிகள் மற்றும் 12 நிதி அதிகாரிகளை உள்ளடக்கிய 44 நாடுகளின் பிரதிநிதிகள் எல் சால்வடாரில் நிதி சேர்த்தல், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற பிட்காயின் தத்தெடுப்பு பற்றி ஆலோசனை செய்ய உள்ளோம் என்று புகேலே டிவிட்டரில் கூறினார்.
தென் அமெரிக்க, ஆப்பிரிக்க, தெற்காசிய
இந்த முக்கியமான கூட்டத்தில் தென் அமெரிக்க, ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாகப் பாகிஸ்தான், பங்களாதேஷ், பராகுவே, ஹைட்டி, மடகாஸ்கர் மற்றும் மாலத்தீவுகள் நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
பிரச்சனை
அமெரிக்க வர்த்தகர்கள், அதிகப் பணவீக்க விகிதங்களை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சந்தைகளுக்குப் பிட்காயின் பணவீக்கத்தைக் குறைக்கும் முதலீடாக இல்லாத காரணத்தால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இக்கூட்டம் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்றாலும் வரும் காலத்தில் அதிகப்படியான பலன்களை அளிக்கும்.
துருக்கி, அர்ஜென்டினா
உதாரணமாக, துருக்கி மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளில், சமீபத்தில் பணவீக்கம் 50% ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் டாலரை விட்டு வெளியேறுவதற்கும் கிரிப்டோகரன்சியை முக்கிய நாணய பரிமாற்றமாக ஏற்றுக்கொள்ள வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. ஆனால் கிரிப்டோ சந்தை மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 500 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.
El Salvador To Discuss Bitcoin Adoption With 44 Countries
El Salvador To Discuss Bitcoin Adoption With 44 Countries பிட்காயின்-ஐ ஏத்துக்கோங்க.. 44 நாடுகளுக்கு அழைப்பு விடுத்த எல் சால்வடோர் அதிபர் நயீப் புகேலே..!