மாஸ்கோ : வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ அமைப்பில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இணைவதை எதிர்த்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா உடன் 1,300 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ள வட ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன், நேட்டோ அமைப்பில் இணைவதாக அறிவித்துள்ளது, ரஷ்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, ரஷ்ய வெளியுறவு துறை இணையமைச்சர் செர்ஜி ரியப்கோவ் கூறுகையில், ”ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைந்தால், அதற்கு தகுந்த பதிலடியை ரஷ்யா தரும். இந்த தவறான முடிவால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்,” என்றார்.உக்ரைன் போல ரஷ்யாவால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைய முடிவு செய்து உள்ளன.
மாஸ்கோ : வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ அமைப்பில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இணைவதை எதிர்த்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.