பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார். இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து முந்தைய அரசில் தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்னி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை
அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ளார்.
61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இது 2-வது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் பேசிய எலிசபெத் போர்னி, இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும், உங்கள் கனவுகளுக்குப் பின் செல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.
புதிய பிரதமர், பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவார் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.
அதிபரும், புதிய பிரதமரும் பிரான்ஸ் புதிய அரசில் பங்கேற்கும் அமைச்சரவை குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.