இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல் புதிதாக ஒரு டெக் சென்டரை அமைக்க முடிவு செய்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் புனேவில் டிஜிட்டல் தொழில்நுட்ப மையம் அதாவது டிஜிட்டல் டெக் சென்டரை அமைப்பதாகக் அறிவித்துள்ளது. புனே டெக் டென்டர் மூலம் இந்தியாவில் மட்டும் நான்காவதாகும். மேலும் இந்த டெக் சென்டரில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டெக் சென்டர்
இந்த டெக் சென்டரை புதிய டிஜிட்டல் சேவைகளை உருவாக்கவும், நிர்வாகம் செய்யவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவை துறையில் தனக்கான இடத்தைப் பிடிக்க டிஜிட்டல் சேவை நிறுவனமாக மாற முடிவு செய்துள்ளது.
புனே
டிஜிட்டல் தொலைத்தொடர்பு நிறுவனமாக மாற்றத்தை ஆதரிப்பதற்காக ஏர்டெல் அதன் உள் டிஜிட்டல் திறமைக் குழுவை விரைவாக விரிவுபடுத்துகிறது. புனே ஒரு நிறுவப்பட்ட ஐடி மற்றும் தொழில்நுட்ப மையமாக இருப்பதால், ஏர்டெல் நிறுவனத்திற்குத் தேவையான ஊழியர்களைப் பெறவும், பிற துறையுடன் இணைந்து பணியாற்றவும் சிறந்த இடமாக இருக்கும் எனப் பார்தி ஏர்டெல் தலைமை தகவல் அதிகாரி பிரதீப் கபூர் தெரிவித்துள்ளார்.
5G சேவை
இது இந்தியாவில் ஏர்டெல்லின் நான்காவது டிஜிட்டல் தொழில்நுட்ப மையமாகவும், மேற்குப் பிராந்தியத்தில் முதல் மையாகவும் உள்ளது. மேலும் 5G சேவைகள் தற்போது மிகப்பெரிய முதலீட்டை செய்துள்ள நிலையிலும், டிஜிட்டல் சேவை நிறுவனமாக மாறு முடிவு செய்துள்ள வேளையிலும் இந்த டெக் சென்டர் முக்கியமானதாக விளங்குகிறது.
5G ஸ்பெக்ட்ரம் ஏலம்
5G ஸ்பெக்ட்ரம் ஏலம் இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5G சேவைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெக் சேவைகள்
இந்தப் புனே டெக் சென்டரில் பிக் டேட்டா, மெஷின் லேர்னிங், டெவ் ஆப்ஸ், டெக் ஆப்ஸ் போன்ற தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற உள்ளது. ஏர்டெல் ஏற்கனவே கூர்கான், பெங்களூர், நொய்டா என 3 இடத்தில் டெக் சென்டர் வைத்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 3000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
Bharti Airtel set up 4th tech centre in Pune
Bharti Airtel set up 4th tech centre in Pune புதிய டெக் சென்டரை அமைக்கும் ஏர்டெல்.. எந்த ஊரில் தெரியுமா..?!