பெங்களூரு : ‘சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடப்பதால், ‘கே.எஸ்.ஆர்., பெங்களூரு – எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல்’ ரயில் நிலையம் இடையேயான ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்படும்,’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:எண்: 12608: கே.எஸ்.ஆர்., பெங்களூரு – எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் லால்பாக் தினசரி பாசஞ்சர் ரயில், பெங்களூரிலிருந்து மே 17, 18, 24, 25, 31, ஜூன் 1, 7, 8 ஆகிய நாட்களில் புறப்பட்டு காட்பாடி ஜங்ஷன் வரை மட்டுமே செல்லும்.மறுமார்க்கத்தில் எண்: 12607: எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – கே.எஸ்.ஆர். பெங்களூரு லால்பாக் தினசரி பாசஞ்சர் ரயில், காட்பாடி ஜங்ஷனிலிருந்து மே 17, 18, 24, 25, 31, ஜூன் 1, 7, 8 ல் புறப்படும்.எண்: 12610: மைசூரு – எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில், மைசூரிலிருந்து மே 17, 18, 24, 25, 31, ஜூன் 1, 7, 8 ல் புறப்பட்டு காட்பாடி ஜங்ஷன் வரை மட்டும் செல்லும்.மறுமார்க்கத்தில் எண்: 12609: எம்.ஜி.ஆர்.,
சென்னை சென்ட்ரல் – மைசூரு தினசரி அதிவிரைவு ரயில், மே 17, 18, 24, 25, 31, ஜூன் 1, 7, 8 ஆகிய நாட்களில் காட்பாடி ஜங்ஷனிலிருந்து புறப்படும்.எண்: 12684: பானஸ்வாடி – எர்ணாகுளம் வாரத்தில் மூன்று நாள் அதிவிரைவு ரயில், மே 16, 23 ல் ஐந்து மணி நேரம் தாமதமாக எர்ணாகுளம் சென்றடையும். மறு மார்க்கத்தில் மே ௧௭, ௨௪ ல் மூன்று மணி நேரம் ௫௦ நிமிடம் தாமதமாக பானஸ்வாடி வந்தடையும்.எண்: 16526: கே.எஸ்.ஆர்.பெங்களூரு – கன்னியாகுமரி தினசரி விரைவு ரயில், மே 16, 23ல் இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றடையும்; மறு மார்க்கத்தில் மே 17, 24 ல் 50 நிமிடம் தாமதமாக பெங்களூரு வந்தடையும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.