இந்திய மாநிலம் கர்நாடகாவில் ஒரு நபர் பெண் வக்கீல் ஒருவரை சாலையில் அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள விநாயக் நகர் அருகே சனிக்கிழமை பிற்பகல் ஒரு பெண் வக்கீல் பலமுறை சரமாரியாகத் தாக்கி உதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல்களில்படி, பாதிக்கப்பட்டவர் வழக்கறிஞர் சங்கீதா என்றும் அவரை தாக்கியது சங்கீதாவின் பக்கத்து வீட்டுக்காரர் மகந்தேஷ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: 36 ஆண்டுகளாக ஆண் வேடத்தில்., மகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த வீரத்தாய்!
இந்த சம்பவம் மொபைலில் படம்பிடிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மந்தேஷ் அந்த பெண்ணை மிகுந்த ஆத்திரத்துடனும் பலத்துடனும் தாக்குவதைக் காட்டுகிறது. அவர் அடிக்கும் அடியை அப்பெண்ணால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை, அவர் பயங்கர வேகத்தில் அவரது வயிற்றில் எட்டி உதைக்கிறார்.
அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள பிளாஸ்டிக் நாற்காலியை எடுக்கும்போது, அந்த ஆண் அவளை மீண்டும் உதைத்து மேலும் அறைந்ததை வீடியோ காட்டுகிறது.
இதையும் படியுங்கள்: படுத்தப் படுக்கையாக புடின்! புற்றுநோயா? முன்னாள் பிரித்தானிய உளவாளி தகவல்
Trigger warning: A lawyer was brutally assaulted by a man named Mahantesh in Vinayak nagar, Bagalkot, Karnataka. pic.twitter.com/kZ3OpUeKbi
— Mohammed Zubair (@zoo_bear) May 14, 2022
சுற்றிலும் ஆட்கள் இருந்தும், இரக்கமில்லாமல் தாக்கப்பட்ட பெண்ணுக்கு யாரும் உதவ முன்வரவில்லை.
சிவில் தகராறு தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம் காரணமாக மந்தேஷ் அந்த பெண்ணை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கறிஞர் தன்னை சித்திரவதை செய்து துன்புறுத்தியதாக அந்த நபர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் இருவரும் பலமுறை சண்டையிட்டதாக கூறப்படுகிறது.