பேருந்து கட்டண உயர்வு: இதுவரை முதல்வர் உத்தரவிடவில்லை – அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து இதுவரை முதல்வர் உத்தரவிடவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
பெரம்பலூர் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது… ஆந்திரா, கேரளா அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயணப் பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதற்கேற்ப அதிகாரிகள் கட்டண உயர்வு பட்டியலை தயார் செய்துள்ளனர். ஆனால், கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் இதுவரை உத்தரவிடவில்லை.
image
போக்குவரத்து தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. போக்குவரத்து கழகம் 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனில் உள்ளது. மாநில உரிமைகளில் எந்தவித சமரசமும் இன்றி முதலமைச்சர் செயல்படுகிறார். ஆதினங்கள் கேட்டுக் கொண்டதாலேயே பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
image
திருநங்கைகளால் பேருந்து பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பேட்டியின் போது தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.