வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி, குறிப்பாக ஞானவாபி மசூதி சுற்றுச்சுவரில் அமைந்துள்ள சிங்கார கௌரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி 5 பெண்களால் நீதிமன்றத்தில் மனு அளிப்பட்டது.
இது சம்மந்தமான அந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதியில் வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு செய்ய அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் நியமித்து இருந்தது.
அதன்படி, பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று வாரணாசி ஞானவாபி மசூதிக்குள் மூன்றாவது நாளாக வீடியோ பதிவுடன் ஆய்வு நடைபெற்று வருகிறது.
வருகின்ற 17ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதால், அஜய் குமார் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே வெளியான ஒரு பரபரப்பு தகவலின்படி, ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நாளை விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஞானவாபி மசூதிக்குள் உள்ள சுவற்றில் சிவலிங்கம் காணப்பட்டதாக ஆய்வுக்குழுவின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மசூதி அமைந்திருக்கும் பகுதியில் துணை இராணுவப் பாதுகாப்புப் படை பணியில் ஈடுபட வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.