புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால், லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்பக் கல்லுாரி அருகே சாலையோர மரம் முறிந்து விழுந்ததில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று மற்றும் இன்று (16ம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் நேற்றிரவு 8:00 மணி முதல் பல்வேறு இடங்களில் இடி, மின்ன லுடன் கனமழை பெய்தது.நகரப்பகுதி மற்றும் முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, இ.சி.ஆர்., உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இதனால், புஸ்சி வீதி, லாஸ்பேட்டை இ.சி.ஆர்., லதா ஸ்டீல் ஹவுஸ் பகுதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள மசூதி எதிரே சாலையோரத்தில் இருந்த பழமையான வேப்ப மரம் ஒன்று, கனமழை காரணமாக, நேற்றிரவு 8:45 மணி அளவில் வேருடன் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருக்கனுார், திருபுவனை உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது.
அண்ணா நகர் பாலத்திற்கு கைமேல் பலன்
Advertisement