ஆந்திர மாநிலம் குண்டூர் அடுத்த தெனாலி பகுதியை சேர்ந்தவர் 20 வயதுடைய காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சர்க்கரையா (வயது 27). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். நேற்று இளம் பெண்ணின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்றதால் வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார். சர்க்கரையா நேற்று மதியம் இளம் பெண் வீட்டிற்குச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்க்கரைய் யாவை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.