The value for the Holcim stake and open offer consideration for Ambuja Cements and ACC is USD 10.5 billion, which makes this the largest-ever acquisition by Adani: இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக கெளதம் அதானி வலம் வருகிறார். இவரது தலைமையிலான அதானி குழுமம் உலகில் பல நாடுகளில் பல பிரிவுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. தற்போது அந்த நிறுவனம் புதிதாக “தானி” சிமெண்ட் எனும் சிமெண்ட் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அதானியின் சிமெண்ட் நிறுவனம், இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை சுவிஸ் நாட்டின் ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றி இருக்கிறது. இந்த நிறுவனத்தைக் கைப்பற்ற ஜின்டால், அல்ட்ராடெக் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டிருந்த நிலையில், கௌதம் அதானியின் அதானி சிமெண்ட் நிறுவனம் அந்த இரண்டு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களையும் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
வெளியேற நினைத்த சுவிஸ் நிறுவனம் – வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அதானி நிறுவனம்
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஹோல்சிம் நிறுவனம் ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை விற்பனை செய்து விட்டு வெளியேற முடிவு செய்தது. இந்த அரிய வாய்ப்பை கச்சிதாக பயன்படுத்திக் கொண்ட அதானி குழுமம் ஜின்டால், அல்ட்ராடெக் போன்ற முன்னணி நிறுவனங்களை முந்திக்கொண்டு சுமார் 10.5 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் வருடத்திற்கு 66 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்து வருகின்றன.
மிகப்பெரிய டீல்
அதானி சிமெண்ட் மற்றும் ஹோல்சிம் நிறுவனங்கள் இடையே நடந்த 10.5 பில்லியன் டாலர் டீல் தான் இந்திய இன்பரா மற்றும் மெட்டிரீயல் பிரிவில் இதுவரையில் நடந்த மிகப்பெரிய வர்த்தகமாக உள்ளது. ஏசிசி சிமெண்ட் மற்றும் அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவின் 2வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக அதானி சிமெண்ட் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil