ஜூம் கால் மூலம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மூலம் அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த Better.com நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமானது. ஆனால் Better.com நிறுவனத்தின் சிஇஓ விஷால் கர்க் அத்துடன் நிற்கவில்லை அடுத்தடுத்து பல முறை பணிநீக்கம் செய்யத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் அவசர அவசரமாக நியமித்த ஊழியர்கள் அனைவரையும் வெளியேற அறிவிப்பு விடுத்துள்ளார் Better.com நிறுவனத்தின் சிஇஓ விஷால் கர்க்.
Better.com
டிசம்பர் 2021 முதல் இரண்டு முறை அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பிறகு, விஷால் கர்க்கின் Better.com செலவுகளைக் குறைப்பதற்காக அமெரிக்க ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து விட்டு இந்தியாவில் அதிரடியாகப் பெரிய குழுவை உருவாக்கியது.
ஊழியர்கள் வெளியேற்றம்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செலவுகளைக் குறைக்கும் விதமாக இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களுக்குத் தானாக முன்வந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை வழங்கியது விஷால் கார்க் தலைமையிலான Better.com. இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே 920 ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளனர்.
ஜூம் கால்
கடந்த ஆண்டுக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக ஜூம் கால் மூலம் கார்க் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பின்னர் மார்ச் மாதம், அன்னையர் தினத்தில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சுமார் 4,000 ஊழியர்களை நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
வட்டி உயர்வு
அமெரிக்காவில் வட்டி உயர்வின் காரணமாகவும், பணவீக்கத்தின் காரணமாகவும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ள வேளையில் இத்துறையில் முன்னோடியாகவும், சிறப்பான டிஜிட்டல் சேவைகளை அளிக்கும் Better.com தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருகிறது.
இந்திய ஊழியர்கள்
இதன் வாயிலாகவே தற்போது விஷால் கர்க் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். கடந்த இரு முறை பணிநீக்கத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டது அமெரிக்க ஊழியர்களாக இருந்த நிலையில், தற்போது இந்திய ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Better.com Vishal Garg offers India employees option to leave voluntarily
Better.com Vishal Garg offers India employees option to leave voluntarily மீண்டும் பணிநீக்கம்.. கோபத்தில் ஊழியர்கள்..! #Better.com