மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா தலைமையிலான ராணுவக் கூட்டணி ஒன்றுபட வேண்டும் என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த ரஷ்யா தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (CSTO) உச்சிமாநாட்டில் பேசிய போது லுகாஷென்கோ இவ்வாறு வலியுறுத்தினார்.
CSTO அமைப்பில் ரஷ்யா, ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவை பலவீனப்படுத்தும் முயற்சியாக உக்ரைனில் நிலவும் மோதலை நீடிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடுவதாக லுகாஷென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக CSTO அமைப்பில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்லாந்து, ஸ்வீடனுக்கு புடின் எச்சரிக்கை!
மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஒற்றுமையாக இருந்திருந்தால் தனது நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் எதிரான மோசமான பொருளாதாரத் தடைகளை தவிர்த்திருக்கலாம்.
நாம் ஒற்றுமையாக இல்லாவிட்டால், சோவியத்துக்கு பிந்தைய நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் அழுத்தத்தை உருவாக்கும் என லுகாஷென்கோ கூறியுள்ளார்.