வானில் ஒரே சமயத்தில் நிகழ்ந்த சந்திர கிரகணம் மற்றும் சூப்பர் மூன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 16) அதிகாலை 3.30 மணி (ஜி.எம்.டி) அளவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தென்பட்டது.

latest tamil news

சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படும் நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு பழுப்பு நிறத்தில் தோன்றியது. புவியின் வளிமண்டலத்திலிருந்து சந்திரன் மீது விழுந்த ஒளி காரணமாக நிலவு பழுப்பாக தோன்றியது.

latest tamil news

அது தவிர பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் மிகவும் குறையும் போது நிலவு பெரிய உருவத்தில் தோன்றுகிறது. இந்தாண்டு இந்த இரண்டு அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.