தமிழ்நாட்டில் பொதுவாக ஒரு கிராம், கால் சவரன், அரை சவரன், முக்கால் சவான், ஒரு சவரன் என்ற அளவில் தான் மக்கள் ஆபரனத் தங்கம் வாங்குகிறார்கள்.
கால் சவரன் என்றால் 2 கிராம், அரை சவரன் என்றால் 4 கிராம், முக்கால் சவரன் என்றால் 6 கிராம், ஒரு சவரன் என்றால் 8 கிராம். எனவே ஏன் தங்கம் 1 சவரன் 8 கிராம் என விளக்கமாக பார்க்கலாம்.
3 மாத குறைந்த விலையில் இருந்து தங்கம் விலை ஏற்றம்.. நல்ல வாய்ப்பு தான்..!
சவரன் ஏன் 8 கிராம்?
பிரிட்டிஷ் இந்தியாவில் ஆட்சி செய்துகொண்டு இருந்த போது, பிரிட்டிஷ் சவரன் தங்க நாணயத்தைப் பலரும் வாங்குவார்கள். அதன் எடை 7.98805 கிராமாக இருந்தது. அதை ரவுண்டக இப்போது 8 கிராமாக கூறுகின்றார்கள்.
ஒரு பவுன் தங்கம் எத்தனை கிராம்?
தமிழ்நாட்டில் ஒரு பவுன் தங்கம், ஒரு சவரன் தங்கம் என கூறுவார்கள். இரண்டுமே 8 கிராம் தங்கம்தான். வட மாநிலங்களில் சவரனுக்குப் பதிலாக டோலா என கூறுவார்கள். டோலா என்றால் 10 கிராம் தங்கம்.
சவரன் தங்கம் 8 கிராம் என நாம் கூறினாலும், தொழில்நுட்ப ரீதியாக சவரன் தங்கத்தின் எடை 7.98 கிராம் தான். கால் சவரன் 1.99 கிராம். அரை சவரன் 3.98 கிராம்.
சுத்த தங்கம்
24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறையத் தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
எந்த மாநிலத்தில் தங்கம் அதிகம் வாங்குகிறார்கள்?
இந்திய நகர்புறங்களில் கேரளாவில் அதிகம் தங்க நகை வாங்குகிறார்கள். தொடர்ந்து தமிழ்நாடு, ஹரியானா, மேற்கு வங்கு, குஜராத், சத்தீஷ்கர், கார்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கிராமப்பகுதிகளில் கேரளாவில் அதிகமாகவும், தொடர்ந்து கோவா, கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தமிழ்நாடு, ஜம்மு & காஷ்மிர், பஞ்சாப் மாநிலங்களில் அதிகம் தங்கம் வாங்குகிறார்கள்.
குறைந்த அளவில் தங்கம் வாங்கும் மாநிலத்தவர்கள்
நகர்ப்புறங்களில் பீகார், கோவா, ஜார்கண்ட், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் குறைந்த அளவில் தங்கம் வாங்குகிறார்கள்.
கிரம புறங்களில் பீகார், அசாம், நாகாலாந்து, மேகாலயா, ஜார்கண்ட், மிசோரம், சிக்கும் மாநிலங்களில் குறைந்த அளவில் தங்கம் வாங்குகிறார்கள்.
தங்கத்தை மக்கள் விரும்பி வாங்க காரணம் என்ன?
பலர் தங்கத்தை விரும்பி வாங்கினாலும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கம் வாங்கினால் அவசர தேவைக்கு அதை உடனே அடகு வைத்தோ விற்றோ பணமாக மாற்ற முடியும். தங்கத்தின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகும்.
அதிகரிக்கும் மதிப்பு
2012-ம் ஆண்டு மே மாதம் 2768 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை 4744 ரூபாயாக உள்ளது. இப்படி மதிப்பு உயர்ந்துகொண்டு செல்வதும் மக்கள் தங்கத்தில் முதலீடு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
why 1 sovereign gold is 8 grams?
Why 1 Sovereign Gold is 8 Grams? தங்கம் 1 சவரன் ஏன் 8 கிராம்.. தெரியுமா?