15 ஆண்டுகள் சந்திக்காத கணவருடைய பெயரை மகனுக்கு வைக்க விரும்புவதாக கூறிய மனைவி: பின்னணியிலிருந்த சதி



தான் 15 ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்த பிரான்ஸ் நாட்டவரான தனது கணவருடைய பெயரை தன் மகனுடைய பெயருடன் இணைக்க விரும்புவதாகக் கூறி அவரை சந்திக்க வந்துள்ளார் ஒரு அமெரிக்கப் பெண்.

Grégoire L. என்ற பிரான்ஸ் நாட்டவரைத் திருமணம் செய்து ஒரு மகனுக்குத் தாயான June Hopkins என்ற பெண், 15 ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வாழ்ந்துள்ளார்.

15 ஆண்டுகளாக அவர் தன் கணவரை சந்திக்கவும் முயற்சிக்கவில்லையாம்.

இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு, தங்கள் மகனுடைய பெயருடன் கணவருடைய பெயரை இணைக்க விருபுவதாகக் கூறி, தன் மகனான Brendan Walshஉடன் வந்து Grégoireயைச் சந்தித்துள்ளார் June.

அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், ஒரு நாள் தாயும் மகனும் தன்னுடைய தனிப்பட்ட ஆவணங்களை தேடியதைக் கவனித்திருக்கிறார் Grégoire. குறிப்பாக தனது தந்தையின் சொத்தாகிய எஸ்டேட் ஒன்று தொடர்பான ஆவணங்களை தாயும் மகனும் தேடியதை அறிந்த அவர் அவர்களிடம் அது குறித்துக் கேட்க, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது Brendan தன் தந்தை மீது எண்ணெய் ஒன்றை ஊற்றி தீவைக்க முயன்றிருக்கிறார். அப்போது வலிமையான ஆதாரங்கள் இல்லாததால் தப்பியிருக்கிறார்கள் தாயும் மகனும்.

பின்னர் மீண்டும் 2015ஆம் ஆண்டு Grégoireஐக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றிருக்கிறார்கள் Juneம் Brendanம்.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டவரான Grégoireஐக் கொலை செய்ய முயன்ற அமெரிக்கப் பெண்ணான Juneக்கு 16 ஆண்டுகளும், அவருக்கு உதவியாக இருந்த Brendanக்கு 12 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தண்டனைக் காலத்துக்குப் பிறகு பிரான்ஸ் மற்றும் அதன் பிராந்தியங்களுக்குள் நுழைய Juneக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. Brendan 15 ஆண்டுகளுக்கு பாரீஸ் பகுதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 60 வயதாகும் June மற்றும் அவரது மகன் Brendan (30) ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.