இந்திய மக்களின் உணர்வுகளிலும், பாரம்பரியத்தோடும் கலந்துள்ள தங்கம், சமீப நாட்களாக மொத்தமாக பார்க்கும்போது சரிவில் காணப்பட்டது. இந்த நிலையில் வாரத் தொடக்கமான இன்று எப்படியுள்ளது?
இனி விலை எப்படியிருக்கும்? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய கமாடிட்டி சந்தையில் விலை நிலவரம் என்ன? மக்கள் பெரிதும் விரும்பும் ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஏசிசி, அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்றியது அதானி குழுமம்..! ஜின்டால் ஏமாற்றம்..!
சற்றே ஏற்றம்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் தற்போது சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. இது தொடர்ந்து சமீபத்திய அமர்வுகளாக தங்கம் விலையானது குறைந்து வந்த நிலையில், அது 3 மாத குறைந்தபட்ச விலையில் காணப்படுகிறது. இது குறைந்த விலையில் முதலீட்டாளர்கள் வாங்கி வருவதால், இன்று ஏற்றம் காண்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி கவலை?
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பொருளாதார வளர்ச்சி என்னவாகுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்கவும் சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
வலுவான டாலர்
வலுவான அமெரிக்க டாலர் மதிப்பானது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து தங்கத்தின் மீதான ஆர்வத்தினை குறைக்கலாம். மொத்தத்தில் டாலரில் தங்கம் வாங்கும் மற்ற நாணயதாரர்களுக்கு விலை உயர்ந்ததாக மாற்றலாம். இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
பத்திர சந்தையும் ஏற்றம்
தொடர்ந்து இரண்டாவது அமர்வாக அமெரிக்காவின் பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம்.
பணவீக்கம்
எப்படியிருப்பினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து நீண்டு கொண்டுள்ள நிலையில், இது இன்னும் சர்வதேச அளவில் பணவீக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். எனினும் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வரவிருக்கும் கூட்டத்திலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக இதுவும் டாலரின் மதிப்பு, பத்திர சந்தை என இரண்டிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 1.57 டாலர்கள் குறைந்து, 1806.67 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக பொறுத்து வர்த்தகம் செய்வது நல்லது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்றே குறையத் தொடங்கியுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 20.992 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து, 49,931 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது .கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 248 ரூபாய் அதிகரித்து, 59,580 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது.கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது இந்திய சந்தையில் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 4744 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 37,952 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 5174 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 41,392 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து, 51,740 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 64.50 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 645 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 64,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இது கொரோனா தாக்கம், தேவை, பணவீக்கம், டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on May 16th, 2022: gold prices up from 3 month lows amid inflation fears
Gold prices have been steadily declining for recent sessions, reaching a three-month low. Today there is a slight increase from the lower price.