விளாடிமிர் புடின் 69 வயதில் தந்தையாக போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில் அவரின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் குறித்த சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி மாத இறுதியில் துவங்கியது. போர் சண்டையானது 90 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது.
இந்த பரபரப்பு சூழலுக்கு இடையில் புடினின் ரகசிய காதலியான அலினா கபேவா (38) கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புடின்-அலினா கபேவா ஆகியோருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதாக (வெளிப்படையாக அறிவிக்கவில்லை) கூறப்படும் நிலையில் தான் அலினா கபேவா கர்ப்பமாகி உள்ள செய்திகள் பரவுகின்றன.
இதுபற்றி ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதை பார்த்த 69 வயதான புதின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அலினா கபேவா என்பவர் யார்?
அலினா கபேவா கடந்த 2004 ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் மொத்தம் 2 பதக்கம் வென்ற இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 9 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார்.
புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சியில் 2007 முதல் 2014 வரை எம்பியாக இருந்தார். கிரெம்ளின் சார்பு ஊடக குழுவான தேசிய மீடியா குழு இயக்குனர்களின் தலைவராகவும் 7 ஆண்டுகளாக செயல்பட்டார்.
அப்போது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 8 மில்லியன் டொலர்கள் அளவுக்கு அவருக்கு சம்பளம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் விளாடிமிர் புடின் தனது மனைவி லியுத்மிலாவை 2014ல் விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்துக்கும் அலினா கபேவா தான் காரணம் என கூறப்பட்டது.
சர்ச்சைகளுக்கு பெயர் போன அலினாவின் மொத்த சொத்து மதிப்பு $10 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.