விமான எரிபொருள் தொடர்ந்து 10வது முறையாக விலை உயருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். அப்படி இன்று விமான எரிபொருள் விலை 5 சதவீதம் உயர்ந்து 1,23,039.71 கிலோ லிட்டர் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உக்ரைனின் முடிவு கைகொடுக்குமா.. செய்வதறியாது திகைக்கும் ரஷ்யா.. எரிபொருள் விலை என்னவாகுமோ?
ஜனவரி மாதம்
ஜனவரி மாதம் 1-ம் தேதி விமான எரிபொருள் விலை 76,062 ரூபாய் கிலோ லிட்டர் என விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதுவே இப்போது 61 சதவீதம் அதிகரித்து 1,23,039.71 கிலோ லிட்டராக உள்ளது.
செலவு
தொடர்ந்து 10வது முறையாக உயர்ந்த இந்த விமான எரிபொருள் விலை 2022, மே 31-ம் தேதி வரையில் இருக்கும். விமான நிறுவனங்கள் செயல்பாடு செலவில் 40 சதவீதம் எரிபொருள் செலவாகவே உள்ளது.
சென்னையில் என்ன விலை?
சென்னையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை 127,286.13 ரூபாய்க்கும், மும்பையில் 1,21,847 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 127,854 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ஆக சென்னையில் ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை 127 ரூபாய் 28 பைசாவாக உள்ளது.
விமான டிக்கெட் கட்டணம் உயருமா?
விமான எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்களும் விமான கட்டணங்களை உயர்த்தலாம். ஆனால் நாம் முன்கூட்டியே திட்டமிட்டு விமான டிக்கெட் புக் செய்தால் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும்.
சிஎன்ஜி
ஞாயிற்றுக்கிழமை சிஎன்ஜி கேஸ் நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட், கிலோவுக்கு 2 ரூபாய் வரை விலை உயர்த்துவதாக அறிவித்தது. எனவே டெல்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு 73.61 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
சமையல் எரிவாயு
மே 7-ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் விலை உயர்ந்ததை அடுத்து, 14.2 கிலோ எடையிலான எல்பிஜி சிலிண்டர் விலை 999.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
காரணம்
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் அனைத்து எரிபொருள்கள் விலை உயர்ந்து உள்ளன. எனவே அத்தியாவசிய பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
Aviation Turbine Fuel Price Hikes for 10th Consecutive Time in 2022, Flight Fare May Go Up
Aviation Turbine Fuel Price Hike Continues 10th Consecutive Time, Flight Fare May Go Up | தொடர்ந்து 10வது முறையாக விமான எரிபொருள் விலை.. டிக்கெட் கட்டணம் உயருமா?