Narzo 50 5G: ரியல்மி நார்சோவின் முதல் 5ஜி ஸ்லிம் போன்!

ரியல்மி
நிறுவனம் சமீபத்தில் தனது பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து நிறுவனம் புதிய பட்ஜெட் 5ஜி போன்களை சந்தைக்கு கொண்டு வரத் திட்டமிட்டது. அந்த வகையில், தற்போது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

அறிமுகமாகும் ரியல்மி போன்களில் இரண்டு வேரியண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இது தொடர்பான பக்கம் அமேசான் ஷாப்பிங் தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 16 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதில்,
Realme Narzo 50 5G
,
Realme Narzo 50 Pro 5G
ஆகிய இரு வேரியண்டுகள் குறித்து அமேசான் பக்கத்தில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நிறுவனம், நார்சோ 50ஐ, நார்சோ 50ஏ, நார்சோ 50 4ஜி, நார்சோ 50ஏ பிரைம் ஆகிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது நினைவுகூரத்தக்கது.

Nothing: நத்திங் போன் பிளிப்கார்ட்டில் வெளியாகிறது – டீஸ் செய்த நிறுவனம்!

ரியல்மி நார்சோ 50 5ஜி வெளியீடு (Realme Narzo 50 5G Launch)

ரியல்மி நார்சோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் மே 18 ஆம் தேதி, பகல் 12:30 மணிக்கு நேரலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. நிறுவனத்தின் பேஸ்புக், யூடியூப் பக்கத்தில் நேரலையைக் காணலாம்.

வெளியீட்டுக்கு முன்னதாக
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி
ஸ்மார்ட்போனில், மீடியாடெக் டிமென்சிட்டி 920 புராசஸர் (Mediatek Dimensity 920), 5 அடுக்கு வேப்பர் கூலிங் சேம்பர் ஆகிய அம்சங்கள் இருக்கும் என நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

DD Free Dish: ரூ.1 கூட செலுத்தாமல் இலவசமாக டிவி பார்க்கலாம்!

ரியல்மி நார்சோ 50 5ஜி அம்சங்கள் (Realme Narzo 50 5G Specifications)

குறைந்த விலை ரியல்மி நார்சோ 5ஜி போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.58″ FHD+ அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போனை மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் இயக்கலாம். ஆண்ட்ராய்டு 12 இயங்குதள அடிப்படையிலான ரியல்மி UI 3.0 ஸ்கின் நிறுவப்பட்டிருக்கும்.

ஸ்மார்ட்போனில், 4ஜிபி/6ஜிபி LPDDR4X ரேம் மெமரியும், 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி ஆதரவும் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்பக்கம் இரண்டு கேமரா கொண்ட அமைப்பு உள்ளது. அதில் பிளாஷுடன் கூடிய 13MP மெகாபிக்சல் முதன்மை சென்சாராகவும், 2MP மெகாபிக்சல் மற்றொன்றுமாக கொடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம் என்று தெரிகிறது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,800mAh லித்தியம் ஐயன் பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்படும்.

புதிய ரியல்மி நார்சோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த முழு தகவல்களையும் உடனுக்குடன் அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.

மேலதிக செய்திகளுக்கு:

Vodafone Idea: 82 ரூபாய்க்கு OTT உடன் புதிய பேக் அறிமுகம்!Russia Ukraine News: போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் 5 ஆப்கள்!Vivo X80: உள்ளங்கைல சினிமா கேமரா… விவோ களமிறக்கும் எக்ஸ் 80 போன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.