இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆப்பிள்,
கூகுள்
ஆகிய உலகின் பெரிய டெக் நிறுவனங்கள், நீண்ட நாட்களாக அப்டேட் செய்யப்படாத ஆப்ஸ் குறித்து அதன் டெவலப்பர்களுக்கு எச்சரிக்கை விடுத்தன.
ஆப்பிள்
நிறுவனம் அனுப்பிய செய்தியில், குறிப்பிட்ட காலத்திற்குள் செயலிகள் மேம்படுத்தப்படாவிட்டால் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்ஸ் அகற்றப்படும் என்று எச்சரித்துள்ளது.
இப்போது, Analytics நிறுவனமான Pixalate இன் அறிக்கையானது, கூகுள்
App Store
, ஆப்பிள்
Play Store
ஆகியவற்றில் உள்ள கிட்டத்தட்ட 30% விழுக்காடு செயலிகள் அகற்றப்படும் அபாயத்தில் இருப்பதாகக் கூறுகிறது. மேலும், கூகுள்
ப்ளே ஸ்டோர்
மற்றும் ஆப்பிள்
ஆப் ஸ்டோர்
ஆகிய இரண்டிலும் இருந்தும், கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.
Google Pixel 6a: புதிய கூகுள் பிக்சல் போன் வெளியாகும் தேதி; சலுகைகள்!
கைவிடப்பட்ட செயலிகள்
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, இந்த செயலிகள் புதிய பதிப்புகளை பெறாததே, இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. நீக்கப்பட்ட செயலிகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட அல்லது தேவையான செயலிகள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இந்த செயலிகள் அனைத்தும் விளையாட்டு, கல்வி போன்ற பட்டியலில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்சலேட்டின் ஆய்வறிக்கையின்படி, 3 லட்சத்து 14ஆயிரம் செயலிகள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை பயனர்களுக்கு அப்டேட் வழங்காமல் இருந்துள்ளது. இதில் 58% விழுக்காடு செயலிகள், அதாவது ஒரு லட்சத்து 84 ஆயிரம் செயலிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலில் இருந்தும், 42% விழுக்காடு செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளது.
பல டெவலப்பர்களும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் எச்சரிக்கைக்கு செவிசாய்த்தனர். கூகுள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் உள்ள 13 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் கடந்த ஆறு மாதங்களில், அதாவது 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில் புதுப்பிக்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
TikTok: விண்வெளியில் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!
ஆப்பிளைத் தொடர்ந்து கூகுளும்..
ஆப் ஸ்டோரில் இருந்து செயலிகள் அகற்றப்படுவதாக அறிவித்த ஆப்பிள் நிறுவனம், இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போன்களில் நிறுவிய பயனர்களுக்கு இது எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனமும் கடந்த மாதம் இதேபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்தது. Play Store இன் இலக்கு நிலையான API தேவைகளை விரிவுபடுத்துவதாக கூகுள் கூறியது. இதன் பொருள் என்னவென்றால், புதிய செயலிகள் மற்றும் புதுப்பிப்புகள் ஒரு வருடத்திற்குட்பட்ட இயங்குதள API தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த செயலிகளை ப்ளே ஸ்டோரில் வெளியிட முடியாது என்றும், பட்டியலிடப்பட்ட செயலிகள் நீக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
iPhone 15: வழிக்கு வந்த ஆப்பிள் – 2023’ல் டைப்-சி உறுதி!
‘கைவிடப்பட்ட’ செயலிகள் ஏன் அகற்றப்படுகிறது?
இந்த செயலிகள் இரண்டு ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்டேட் செய்யப்படாத செயலிகளில், பாதுகாப்பு ஆபத்து எப்போதும் இருக்கும். பயன்பாடுகள் புதுப்பிக்கப்படாவிட்டால், அவை பாதுகாப்பு இணைப்புகளைப் பெறாது.
மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய பிழைகள் அவற்றில் இருக்கும். ஒரு டெவலப்பர் விளம்பரதாரர்களிடமிருந்து வருவாயை எதிர்பார்க்கிறார் என்றால், பயன்பாட்டை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.
Elon Musk Twitter: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்விட்டர் சிஇஓ!
பயன்பாடுகள் எப்போது அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
டெவலப்பர்களுக்கான எச்சரிக்கை மின்னஞ்சலில், செயலிகளின் புதிய பதிப்பை வெளியிட 30 நாள்கள் அவகாசம் தருவதாகவும்; இல்லையேல் ஆப் ஸ்டோரிலிருந்து அவை அகற்றப்படும் என்றும் ஆப்பிள் கூறியுள்ளது. எனவே ஆப்பிள் எப்படி, எப்போது பயன்பாடுகளை அகற்றும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
மறுபுறம், கூகுள் நவம்பர் 1, 2022 என்ற தேதியை இலக்காக வைத்துள்ளது. இதற்கு முன்னதாக செயலிகள் புதிப்பிப்பு பெறவில்லை என்றாலும், புதிய இயங்குதளத்திற்கு ஒத்ததாக மாற்றம் காணவில்லை என்றாலும், குறிப்பிட்ட தேதிக்கு பின் அந்த செயலிகள் நீக்கப்படும்.
மேலதிக செய்திகள்:
Google Search: கூகுளில் இவற்றை ஒருபோதும் தேடாதீர்கள்!Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!Jio 5G: ஜியோ 5ஜி வேகம் என்ன தெரியுமா மக்களே!