WhatsApp Update:
வாட்ஸ்அப்
பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாகக் கூற ஒன்றுமில்லை. ஏனென்றால், பயனர்களை கவர இடையிடையே புதிய அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப் ஸ்டேடஸில் புதிய அம்சத்தை நிறுவனம் சேர்க்க உள்ளது. வெளியான தகவல்களின்படி, இணைப்பு முன்னோட்டம் இப்போது ஸ்டேடஸிலும் தோன்றும். தற்போது, ஸ்டேட்டஸில் ஏதேனும் URL அல்லது இணைப்பைப் பகிரும்போது, அந்த இணைப்பை மட்டுமே நாம் பார்க்க முடியும்.
ஆனால், சமீபத்திய புதுப்பித்தலுக்குப் பிறகு, கட்டைவிரல் படத்துடன் மெட்டாவின் விளக்கமும் தோன்றும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், புதுப்பித்தலுக்குப் பிறகு, எளிய முறையில் காட்சியளிக்கும் URL தோன்றாது.
Dangers Of Smartphones: தற்கொலைக்கு தூண்டுகிறதா ஸ்மார்ட்போன் பயன்பாடு – அதிர்ச்சி ரிப்போர்ட்!
வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ வெளியிட்ட தகவல்
வாட்ஸ்அப்பின் அம்சங்களை கண்காணிக்கும் WABetaInfo புதிய அப்டேட் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது. இந்த குறிப்பிடப்பட்ட புதிய அம்சங்கள் iOS இன் பீட்டா பதிப்பில் சோதிக்கப்படுவதாக WABetaInfo தெரிவித்துள்ளது. புதிய அம்சங்களின் ஸ்கிரீன் ஷாட்டும் வெளியாகியுள்ளது.
புதிய அம்சங்கள் விரைவில் Android மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் சோதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டில், அரட்டைகளில் பகிரும் இணைப்புகளின் முன்னோட்ட (Rich Link Preview) புதுப்பிப்பை WhatsApp வெளியிட்டது.
இப்போது அது ஸ்டேட்டஸ்களுக்கும் விரிவுப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. Android பயன்பாட்டிற்கான ஸ்டேட்டஸ் என்ற புதிய அம்சத்தையும் WhatsApp சோதித்து வருகிறது.
வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள்
Meta நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் Mark Zuckerberg சமீபத்தில் WhatsApp எமோஜி எதிர்வினை அப்டேட்டை அறிவித்தார். தற்போது இது பெரும்பாலான பயனர்களுக்கு கிடைத்துள்ளது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ளது போன்ற அம்சமாகும் இது.
மேலும், வாட்ஸ்அப்பில் மற்றொரு சிறந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில், நிறைய நபர்களைச் சேர்க்க நீங்கள் இனி இரண்டு குழுக்களை உருவாக்க வேண்டியதில்லை. ஏனெனில், புதிய அப்டேட் மூலம் நீங்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் 512 பேரைச் சேர்க்க முடியும்.
தற்போது, வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் பீட்டா பதிப்பின் வாயிலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அப்டேட் அனைவருக்கும் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
Play Store: ஆப்பிளை தொடர்ந்து கூகுளும் நடவடிக்கை – காலியான 15 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கள்!
குழுவில் அதிக உறுப்பினர்கள்
முக்கியமாக, தற்போது ஒரு குழுவில் 256 பேரை மட்டுமே சேர்க்க முடியும். மேலும், வாட்ஸ்அப்பில் மற்றொரு புதிய அம்சம் வரவுள்ளது. இது குழு நிர்வாகிகளுக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் குழு நிர்வாகி எந்த செய்தியையும் நீக்க முடியும்.
மேலும், குழுக்களில் 2GB வரையிலான கோப்புகளை பகிரும் புதிய அம்சமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் இந்த அம்சங்கள் பயனர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மெட்டா
நிறுவனம் வாட்ஸ்அப் தளத்தை வேற லெவலுக்கு எடுத்துச் செல்வதாக பயனர்கள் சிலாகித்து வருகின்றனர்.
மேலதிக செய்திகள்:
Maadhaar App: கைக்குள் அனைத்தும் இருக்க கவலை ஏன்? எளிதாக ஆதார் கார்டு அப்டேட் செய்யலாம்!Vivo X80: உள்ளங்கைல சினிமா கேமரா… விவோ களமிறக்கும் எக்ஸ் 80 போன்!Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!