மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘அன்னையர் தினம் கொண்டாடப்படுவதை போல, மனைவிகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த ஞாற்றுக்கிழமை மகாராஷ்டிராவில் உள்ள சாங்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அன்னையர் தினம் குறித்துப் பேசினார். அதனை தொடர்ந்து பேசியவர், ‘அன்னையர் தினத்தை போல, மனைவிகளுக்கு என ஒரு தினத்தை நாம் கொண்டாட வேண்டும்’ என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ‘நம்மை நம் தாய் பெற்றெடுத்து வளர்த்த பின், நம்மை கஷ்டத்திலும், துன்பத்திலும் தாங்கிப்பிடிப்பது மனைவிதான். நம்முடைய நல்ல நேரத்திலும், கெட்ட நேரத்திலும் நம்முடன் மனைவியே பயணிக்கிறார். மேலும், ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னும் இருக்கும் பெண்ணாக, மனைவி இருக்கிறார். ஆகவே நாம் மனைவியர் தினத்தை கொண்டாட வேண்டும் என்பது மிக அவசியமாகும்’ என்றார்.
இணை அமைச்சரின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தவண்ணம் உள்ளது.