உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய அனுப்பிய ஆயுதங்களை ஏவுகணையால் தாக்கி அழித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
போலந்து எல்லைக்கு அருகே உள்ள உக்ரைனின் லிவிவ் பகுதியில் வைத்து ஏவுகணை மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆயுதங்களை தாக்கியதாக ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது தொர்பில் ரஷ்யா அதிபர் புடின் மற்றும் மற்ற மூத்த அரசாங்க அமைச்சர்கள் தொடர்ந்து கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அதுமட்டுமின்றி, ஆயுதங்களை வழங்கும் கான்வாய்களை குறிவைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய ராணுவ வீரர்கள்!
முன்னதாக, மரியுபோல் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் தஞ்சமடைந்திருந்த 250-க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்ததாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிக்கை வெளிட்டதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.