அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை; காரணம் என்ன

கொரோனா வைரஸ் தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை சந்தித்து மீண்டு வர அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. 

அமெரிக்காவிலுள்ள 80% க்கும் அதிகமான வயது வந்தோர் இந்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்று நம்புகிறார்கள். மார்ச் கடைசி வாரத்தில் மொமென்டிவ் நிறுவனம் நடத்திய இந்த கணக்கெடுப்பில், 4000திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர். அதில், அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை மீண்டும் ஏற்படும் என்ற அச்சம் அதிகமாக இருப்பதாக இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களில் 91% மந்தநிலை ஏற்படப் போகிறது என்ற அச்சத்தில் உள்ளனர், அதே நேரத்தில், 88 சதவீதம் பேர், நாட்டில் நிதி நெருக்கடி, பொருளாதார மந்தநிலை மீண்டும் வருமோ என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது கோவிட் தொற்று நோய் பரவல காரணமாக ஏற்பட்ட மந்தநிலை. இதனால், நாடு முழுவதும் பல இடங்களில் அலுவலகங்கள் மூடப்பட்டு, மக்கள் வேலை இழந்தனர். 

மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?

இருப்பினும், அதன் பின்னர் அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகள் மீண்டும் ஏற்பட்டன. மக்களின் சம்பளமும் நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் டாலர்கள் அதிகரித்தது. இதன் காரணமாக, பொருளாதார வல்லுநர்கள் எந்தவிதமான மந்தநிலை ஏற்படும் என கணிக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் நிச்சயமாக இது தொடர்பான அச்சம் உள்ளது. வேலை வாய்ப்புக்கான ஆலோசனை வழங்கும் ஒர் அமெரிக்கா நிறுவனத்தின் பொருளாதார ஆராய்ச்சி இயக்குனர் ‘நிக் பெர்னர்’ இது குறித்து கூறுகையில், பொருளாதாரம் வளர்ச்சி குறையும், ஆனால் மந்தநிலை ஏற்பட வாய்ப்பில்லை என்றார்

அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகம் இது குறித்து கூறுகையில், பொருளாதார மந்தநிலை என்பது நாடு முழுவதும் பொருளாதார பரிவர்த்தனைகள் திடீரென்று குறைதல் மற்றும் பல மாதங்கள் அதே நிலை நீடித்தல் என்பதாகும் என்றார்.

அமெரிக்காவில் மந்தநிலை பற்றிய மக்களின் அச்சம் பொருட்களின் விலை உயர்வு காரணமாக எழுந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போனால், மக்கள் டாலர்களை செலவழிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்றும், மந்தநிலை ஆபத்து உருவாகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது குறித்து, நேவி ஃபெடரல் கிரெடிட் யூனியனின் கார்ப்பரேட் பொருளாதார நிபுணர் ராபர்ட் ஃப்ரிக் கூறுகையில், பொருளாதார மீட்சி ஏற்படும் போதெல்லாம் பொருட்களின் விலை உயரும் என்றார்.

மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.