அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த சம்பவம்: உளவியல் பாதிப்பு என தப்பிக்க பார்க்கும் இந்தியர்


அவுஸ்திரேலியாவில் மனைவி மற்றும் 6 வயது மகளை படுகொலை செய்த வழக்கில், உளவியல் பாதிப்பு என கூறி முக்கிய குற்றவாளி தப்பிக்க வழி தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெல்போர்னின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஜனவரி 13ம் திகதி, நாட்டையை உலுக்கிய அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

40 வயதான பிரபல் ஷர்மா தமது மனைவி பூனம் ஷர்மா மற்றும் 6 வயது மகள் வனேசா ஆகியோரை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
இவர்களின் 10 வயது மகள் ஏஞ்சலா காயங்கள் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த சம்பவம்: உளவியல் பாதிப்பு என தப்பிக்க பார்க்கும் இந்தியர்

இந்த வழக்கில் விசாரணை எதிர்கொண்டு வந்துள்ளார் பிரபல் ஷர்மா. ஆனால் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பிரபல் ஷர்மா தற்போது உளவியல் பாதிப்பு தொடர்பில் நாடகமாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது சட்டத்தரணி மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தமது கட்சிக்காரர் உளவியல் சிகிச்சைக்கு உட்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெயர் வெளியிடப்படாத மனநல மருத்துவர் சர்மாவை ஜூன் மாத இறுதியில் ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளார் எனவும், அந்த அறிக்கையின் முடிவு ஜூலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த சம்பவம்: உளவியல் பாதிப்பு என தப்பிக்க பார்க்கும் இந்தியர்

சம்பவத்தன்று, பல் மருத்துவரான பூனம் ஷர்மா ரத்த காயங்களுடன் உதவி கேட்டு அண்டை வீட்டில் தஞ்சம் தேடியதாகவும், ஷர்மாவும் அவரை பின் தொடர்ந்து சென்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பூனம் ஷர்மா சம்பவயிடத்திலேயே காயங்கல் காரணமாக மரணமடைந்துள்ளார். குற்றுயிராக மீட்கப்பட்ட வனேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த சம்பவம்: உளவியல் பாதிப்பு என தப்பிக்க பார்க்கும் இந்தியர்

இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் ஷர்மாவை நெருங்கிய நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். தொடர்ந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்றே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.