நடப்பு கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஓதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20 -ந் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரை இணையதளம் வழியாக பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25 சதவீதம் சேர்க்கைக்கு மே 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
சோதனையில் சி.பி.ஐ.க்கு எதுவும் கிடைக்கவில்லை- ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவு