ஆர்பிஐ: 6 விண்ணப்பங்கள் ரத்து.. பிளிப்கார்ட் சச்சின் பன்சால்-க்கு பின்னடைவு..!

ஆன்-டாப் முறையில் யுனிவர்சல் வங்கிகள் அமைக்க விண்ணப்பம் அளித்த நான்கு அமைப்புகளையும், சிறு நிதி வங்கிகள் அமைக்க விண்ணப்பம் அளித்த இரண்டு அமைப்புகளையும் விதிமுறைகளுக்குப் பொருந்தாத காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை 6 நிறுவனங்களின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆன்-டாப் லைசென்சிங் என்பது ரிசர்வ் வங்கியின் வங்கி உரிமத்தைப் பெறுவதற்கான கதவுகளை ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.

முன்னதாக, ஆர்பிஐ வங்கி உரிமங்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை அழைத்தது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பித்துத் தணிக்கை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

யூனிவெர்சல் வங்கியை அமைக்க உரிமம் பெற நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்

1. சச்சின் பன்சால் தலைமையிலான சைதன்யா இந்தியா ஃபின் கிரெடிட் பிரைவேட் லிமிடெட்

2. UAE எக்ஸ்சேஞ்ச் அண்ட் பைனாசியல் சர்விச்ஸ் லிமிடெட்

3. ரெப்கோ வங்கி

4. பங்கஜ் வைஷ் மற்றும் பலர்.

சிறு நிதி வங்கிகள் அமைக்க ‘ஆன் டேப பிரிவின் கீழ் உரிமம் பெற நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்

1. VSoft டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்

2. காலிகட் சிட்டி சர்வீஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட்

என மொத்தம் 6 வங்கிகளின் விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளது.

யுனிவர்சல் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளுக்கு ‘ஆன் டேப்’ உரிமம் வழங்குவதற்கான வங்கியை அமைக்க ரிசர்வ் வங்கி சுமார் 11 பேரிடம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இதில் 6 விண்ணப்பங்கள் முதல் கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறையின்படி ஆறு விண்ணப்பங்களின் ஆய்வு இப்போது முடிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் வங்கிகளை அமைப்பதற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்குவதற்கு ஏற்றதாகக் கண்டறியப்படவில்லை. என 6 விண்ணப்பங்களின் ரத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளது.

 

வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ.. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆர்பிஐ செய்யப்போவது இதை தான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sachin Bansal’s Chaitanya and 5 applications RBI rejects on-tap licensing for setting up banks

Sachin Bansal’s Chaitanya includes 6 applications RBI rejects on-tap licensing for setting up banks ஆர்பிஐ: 6 விண்ணப்பங்கள் ரத்து.. பிளிப்கார்ட் சச்சின் பன்சால்-க்கு பின்னடைவு..!

Story first published: Tuesday, May 17, 2022, 19:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.