குறைந்த வருமானத்தைக்கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக, ஒரு வாரத்திற்கு போதுமான, பால் உள்ளிட்ட அத்தியயாவசிய பொருட்களைக்கொண்ட , 40 மில்லியன் உலர் உணவுப் பொதிகளை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையின் முதற்கட்டமாக ஒரு மில்லியன் உணவுப் பொதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (18) இலங்கைக்கு வரவுள்ளதாக அத்தியாவசிய உணவு விநியோக நெருக்கடி குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணம், பதுளை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள குறைந்த வருமானத்தைக்கொண்ட குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளன.