ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க தமிழா அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆண்மையின் நடந்துமுடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், “ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க வழிவகை செய்யப்படும்” என்று, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு படி இன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,
8-ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 10-ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் ஒரு முக்கிய நிபந்தனையாக, “உயர்கல்வி பயில மட்டுமே இந்த இணையான சான்றிதழ் பயன்படும் என்றும், அரசு வேலைவாய்ப்புக்கு இந்த சான்றிதழ் கருத்தில் கொள்ளப்படாது” என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.