புதுடில்லி :பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது.
இந்நிறுவன பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களிடம், லாபத்தை அடைய வாய்ப்பிருக்குமா என்ற கேள்வியே இன்று எழுந்து நிற்கிறது.
புவிசார் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அண்மைக் காலமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவைக் கண்டு வருகின்றன. இந்நிலையில், எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டை ஒட்டி, ஏராளமான புதிய முதலீட்டாளர்கள், இந்நிறுவன பங்குகளை வாங்கியதன் வாயிலாக, சந்தைக்குள் அடி எடுத்து வைத்துள்ளனர். இவர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.எல்.ஐ.சி.,க்கு முன் மிகப் பெரிய பங்கு வெளியீடாக இருந்தது, ‘பேடிஎம்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை பொதுத்துறையைச் சேர்ந்த 21 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை பட்டியலிட்டுள்ளன.இவற்றில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள், வெளியீட்டு விலைக்கும் குறைவாகவே வர்த்தகம் ஆகின. இந்நிலையில், எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் விலை, வெளியீட்டு விலையை விட அதிகரித்து, குறுகிய காலத்தில் லாபமீட்டி தருமா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும்.
புதுடில்லி :பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது. இந்நிறுவன பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீடுகளை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.