கொழும்பு:
இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராக, ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும். தற்போதைய பிரச்னைகளை தீர்க்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை அல்லது அரசியல் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை அவசரமாக உள்ளது. தற்காலிக, நிரந்தர திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை என்று என்று தெரிவித்தார்.