இந்திய ரீடைல் துறைக்குள் வேகமாக வள்ர்ச்சி அடைந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது. முகேஷ் அம்பானியின் திட்டம் மூலம் பல முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களே ஆடிப்போய் உள்ளது.
இப்புதிய திட்டம் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தும் நிலைக்கு உயர உள்ளது.
3 மாத குறைந்த விலையில் இருந்து தங்கம் விலை ஏற்றம்.. நல்ல வாய்ப்பு தான்..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது இந்தியா முழுக்கத் தனியார் ஆன்லைன் விற்பனையாளர்கள் உடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது. இந்த இணைப்பு மூலம் புதிய ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு புதிய ஈகாமர்ஸ் கொள்கையை வெளியிட உள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆன்லைன் விற்பனையில் ஏற்கனவே ஜியோமார்ட் மூலம் சிறப்பான அனுபவத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்ட வர்த்தகப் பிரிவுக்கு நகர முடிவு செய்துள்ளது.
ஈகாமர்ஸ் கொள்கை
மத்திய அரசு விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வர உள்ள ஈகாமர்ஸ் கொள்கையில் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குத் தொடர்புடைய நிறுவனங்களோ அல்லது சொந்த நிறுவனங்களோ தங்களது ஈகாமர்ஸ் தளத்திலேயே செல்லர் அதாவது விற்பனையாளராக இருக்கக் கூடாது என்பது தான்.
ரிலையன்ஸ் மகிழ்ச்சி
இந்த விதிமுறையைப் பிளிப்கார்ட், அமேசான் முதல் சமீபத்தில் ஈகாமர்ஸ் துறைக்குள் வந்த டாடா குழுமம் வரையில் எதிர்த்தும் மறுப்பு தெரிவித்தும் வரும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் வரவேற்றுள்ளது. ஏன் தெரியுமா..
ஜியோமார்ட்
தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்தின் படி தனது சொந்த பிராண்ட பொருட்களையும், கூட்டணி முறையில் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் பொருட்களை ஜியோமார்ட் தளத்தில் விற்பனை செய்யும், தற்போது புதிதாகச் சேர்த்து வரும் தனியார் விற்பனையாளர்களை புதிதாக ஒரு ஈகாமர்ஸ் தளத்தில் சேர்க்க உள்ளது.
புதிய நிறுவனம்
இதனால் இருபுறமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆன்லைன் வர்த்தகத்தைப் பெற முடியும். மேலும் புதிய நிறுவனத்தின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றும், இதிலும் ஜியோ என்ற பெயர் இருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
ஐடிசி, யூனிலீவர்
இதேவேளையில் இந்தியாவில் ஐடிசி, யூனிலீவர் நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் சுமார் 6.5 பில்லியன் டாலர் முதலீட்டில் சிறு மளிகை மற்றும் உணவு அல்லாத பிராண்டுகளைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இந்த 6.5 பில்லியன் டாலர் பணத்தின் மூலம் சுமார் 12க்கும் அதிகமான நிறுவனங்களை வாங்க முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
Mukesh Ambani’s Reliance building separate online marketplace for third-party sellers
Mukesh Ambani’s Reliance building separate online marketplace for third-party sellers அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்திற்குப் போட்டியாக ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைய திட்டமிட்டு உள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். முகேஷ் அம்பானி வேறலெவல் திட்டம்..!