உலகின் 3-ம் மிகப் பெரிய மதிப்பு வாய்ந்த நிறுவனமான மைக்ரோசாப்ட், அதன் பெரும்பாலான ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவதற்காக அமைக்கும் பட்ஜெட்டை “கிட்டத்தட்ட இருமடங்காக” அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
யாருக்கெல்லாம் இந்த சம்பள உயர்வு கிடைக்கும்?
மைக்ரோசாப்ட் எடுத்துள்ள இந்த முடிவால் குறைந்தது 25 சதவீதம் வரை ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தும் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் புதிதாகச் சேர்ந்தவர்கள் மற்றும் சில வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
முதல் முறை
தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மைக்ரோசாப்ட் இந்த ஊதிய உயர்வு முடிவை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இதுவரையில் இல்லாத அளவிற்கு முதல் முறையாகச் சம்பளத்திற்காகக் கூடுதல் முதலீட்டை மைக்ரோசாப்ட் செய்ய உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏன்?
பணவீக்கம் மற்று தினசரி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்காக உலகின் திறன் படைத்த ஊழியர்கள் இங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நிறுவனம் அளிக்கும் அங்கிகாரம் தான் இந்த சம்பள உயர்வு.
சத்யா நாதெல்லா
“நீங்கள் செய்யும் அற்புதமான பணியின் காரணமாக, உங்கள் திறமைக்கு அதிக தேவை இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்,” என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தனது எண்ணங்களைச் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இப்போது 1,81,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சம்பள உயர்வால் அவர்களின் கணிசமான நபர்கள் பயனடைவார்கள் என மைக்ரோசாப்ட் நம்புகிறது.
கோல்ட்மேன் சாச்ஸ்
சமீபத்தில், சர்வதேச முதலீட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ், பணியாளர்கள் வரம்பற்ற விடுமுறை எடுக்கக்கூடிய புதிய விடுமுறைக் கொள்கையை ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதை தொடர்ந்து மைக்ரோசாப்ட் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Microsoft ‘Nearly Double’ Salary Budget To Its 181,000 Employees
Microsoft ‘Nearly Double’ Salary Budget To Its 181,000 Employees | ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?