எல்ஐசி ஐபிஓ: தள்ளுபடி விலையில் பட்டியல்.. முதலீட்டாளர்கள் சோகம்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) வெற்றிகரமான ஐபிஓ-வில் 3 மடங்கு முதலீட்டை பெற்ற நிலையில் இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

மும்பை பங்குச்சந்தை சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை காரணமாக நிச்சயமற்ற சந்தையைக் கொண்டு இருக்கும் நிலையில் எல்ஐசி பங்குகளின் பட்டியலிடப்படும் விலை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

3 மாத குறைந்த விலையில் இருந்து தங்கம் விலை ஏற்றம்.. நல்ல வாய்ப்பு தான்..!

எல்ஐசி ஐபிஓ தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

 மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

எல்ஐசி பங்குகள் சுமார் 65 ரூபாய் தள்ளுபடி விலையில் சுமார் 867.20 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. ஆனால் வர்த்தகம் துவங்கி சில நொடுகளில் எல்ஐசி பங்குகள் விலை உயர துவங்கியுள்ளது.

பட்டியல் விலை

பட்டியல் விலை

எல்ஐசி பங்குகள் 867.20 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட பின்பு 5.25 சதவீதம் உயர்ந்து 905.30 ரூபாய் வரையில் உயர்ந்து 38 ரூபாய் அதிகரித்துள்ளது. முதல் 5 நிமிடத்தில் எல்ஐசி பங்குகள் சுமார் 920 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

ஏமாற்றம்
 

ஏமாற்றம்

எல்ஐசி பங்குகளின் இந்த சரிவு ரீடைல் முதலீட்டாளர்கள் குறிப்பாக எல்ஐசி ஊழியர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேடிஎம் இழப்பை எல்ஐசி தீர்க்கும் என எதிர்பார்த்து இருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் ஏமாற்றம் தான்.

கிரே சந்தை

கிரே சந்தை

அதிகாரப்பூர்வமற்ற கிரே சந்தையில், எல்ஐசி பங்குகளின் வெளியீட்டு விலையான ₹949க்குக் 19 ரூபாய் குறைவாக வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் இந்தத் தள்ளுபடி விலை அளவு 25 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு விலை

வெளியீட்டு விலை

இதே வேளையில் கடந்த வாரம் வெளியான தகவல்கள் படி ஐபிஓ-வின் அதிகப்படியான விலையான 949 ரூபாயை வெளியீட்டு விலையாக நிர்ணயம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் 3 மடங்கு முதலீடுகள் குவிந்திருக்கும் காரணத்தால் ப்ரீமியம் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை

விற்பனை

ஆனால் கிரே மார்கெட்டில் தற்போது எல்ஐசி பங்குகளை டிஸ்கவுன்ட் விலையில் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்கும் போது, எல்ஐசி பங்குகள் பட்டியிலிட்ட பின்பும் அதிகப்படியான விற்பனையை எதிர்கொள்ளும் என்ற நிலைப்பாடும் சந்தையில் நிலவுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC debut at 8 percent discounted price today retail investors cried over loss

LIC debut at 8 percent discounted price today retail investors cried over loss எல்ஐசி ஐபிஓ: தள்ளுபடி விலையில் பட்டியல்.. முதலீட்டாளர்கள் சோகம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.