எல்ஐசி நிறுவன பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 5 சதவீதத்திற்கு மேல் விலை குறைந்ததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எல்ஐசி நிறுவனத்தின் மூன்றரை சதவீத பங்குகள் பொது பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்பட்டன. ஒரு பங்கு 949 ரூபாய் என்ற விலையில் 22 கோடியே 13 லட்சம் பங்குகள் விற்கப்பட்ட நிலையில், இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்வுடன் வர்த்தகம் ஆன போதும், எல்ஐசி பங்குகள் விலை 5 சதவீதத்திற்கு மேல் விலை குறைந்ததால் முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்து.