எல்லோருக்கும் நன்றி.. வலிமையுடன் அடுத்த ஐபிஎல்லில் வருவேன்! விலகிய கொல்கத்தா அணி வீரர்


காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் அஜிங்கியா ரஹானே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத், ராஜஸ்தான், லக்னோ அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நான்காவதாக அடுத்து சுற்றும் அணிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

குறிப்பாக, 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது கடைசி போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. ஆனால் மற்ற அணிகளின் முடிவுகள் கொல்கத்தாவுக்கு சாதகமாக அமைய வேண்டும்.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான அஜிங்கியா ரஹானே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகுவதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனினும் ஒரு தொடக்க வீரரை இழப்பது கொல்கத்தா அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எல்லோருக்கும் நன்றி.. வலிமையுடன் அடுத்த ஐபிஎல்லில் வருவேன்! விலகிய கொல்கத்தா அணி வீரர்

இதுதொடர்பாக ரஹானே தங்கள் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்திடம் பேசியபோது, ‘உங்கள் அனைவருடனும் விளையாட்டிலும், வெளியிலும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன்.

ஒரு கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை பற்றியும், மற்ற அனைத்து விடயங்களை பற்றியும் கற்றுக் கொண்டேன்.

கண்டிப்பாக அடுத்த ஆண்டு வலிமையுடன் திரும்பி வருவேன். அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் ஒரு அணியாக நாம் சிறப்பாக செயல்படுவோம். பிளேஆப் சுற்றுக்கு கண்டிப்பாக கொல்கத்தா அணி செல்லும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.  

எல்லோருக்கும் நன்றி.. வலிமையுடன் அடுத்த ஐபிஎல்லில் வருவேன்! விலகிய கொல்கத்தா அணி வீரர்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.