நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளின் முயற்சிக்கு துருக்கி ஒப்புதல் அளிக்காது என அந்த நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கைகளை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன், மேற்கத்திய ராணுவ கூட்டமைபான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நோட்டோ கூட்டமைப்பில் ஏதேனும் புதிய நாடுகள் இணைய வேண்டுமென்றால் அதற்கு அதன் தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
இந்தநிலையில், நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் முயற்சிக்கு துருக்கி எப்போதும் ஒப்புதல் தராது என அந்த நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் பேசிய எர்டோகன், நோட்டோ விண்ணப்பம் தொடர்பாக தங்களை நம்ப வைப்பதற்காக ஸ்வீடிஷ் மற்றும் பின்லாந்து பிரதிநிதிகள் தலைநகர் அங்காராவிற்கு வந்து தேவையில்லாமல் தங்களைசேர்வடைய வைக்ககூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இருநாடுகளுக்கும் பயங்கரவாத அமைப்பு குறித்து தெளிவான மற்றும் வெளிப்படையான அணுகுமுறை இல்லாத போது எவ்வாறு அவர்களை நம்புவது என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் ஸ்வீடனை ஹேச்சரி என்ற பயங்கரவாத அமைப்பு என்றும், அவர்களது நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: மரியுபோல் ஆலையில் இருந்து…பேருந்து வெளியேறிய உக்ரைனிய வீரர்கள்: அமைச்சர் அறிவிப்பு
நோட்டோ தொடர்பாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் பிரதிநிதிகள் துருக்கிக்கு திங்கள் கிழமை வரவிருந்த நிலையில் எர்டோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.