ஒரு கார் கூட விற்கவில்லை.. ஷாங்காய் நகரத்தை புரட்டிப்போட்ட லாக்டவுன்..!

ஆறு வாரங்களுக்கும் மேலாக நீடித்த, கடுமையான கோவிட் லாக்டவுனை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்து வந்த நிலையில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஜூன் 1 முதல் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான திட்டங்களை ஷாங்காய் நகரம் திங்கள்கிழமை அமைத்ததுள்ளது.

ஆர்பிஐ: 6 விண்ணப்பங்கள் ரத்து.. பிளிப்கார்ட் சச்சின் பன்சால்-க்கு பின்னடைவு..!

ஷாங்காய் நகரம்

ஷாங்காய் நகரம்

இன்னும் தெளிவான கால அட்டவணையை வெளியிடாத நிலையில் ஷாங்காய் நகரின் துணை மேயர் சோங் மிங் நகரம் பல கட்டங்களில் திறக்கப்படும் என்று கூறினார், இயக்கம் தடைகள் பெரும்பாலும் மே 21 வரை இடத்தில் இருக்கும். இந்தக் குறைவான கட்டுப்பாடுகள் தொற்று நோய்கள் மீண்டும் பரவுவதைக் கண்காணிக்க உதவும்.

தொழில்துறை உற்பத்தி

தொழில்துறை உற்பத்தி

சீனாவின் தொழில்துறை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை ஏப்ரல் மாதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான வளர்ச்சியைப் பதிவு செய்து, உற்பத்தி அளவீட்டில் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தது உள்ளது.

முக்கியத் துறை
 

முக்கியத் துறை

இதேபோல் கேட்டரிங் வருவாய் 22.7% சரிந்தது, சொத்து விற்பனை மதிப்பு 46.6% சரிந்தது மற்றும் வாகன விற்பனை 47.6% சரிந்தது. ஏப்ரல் மாதத்தில் சில்லறை விற்பனை முந்தைய ஆண்டை விட 11.1% சுருங்கியது, இது மார்ச் 2020 க்குப் பிறகு மிகப்பெரிய சரிவாகும்.

ஒரு கார் கூட விற்கவில்லை

ஒரு கார் கூட விற்கவில்லை

25 மில்லியன் மக்கள் கொண்ட சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ஷாங்காயில், ஏப்ரல் மாதம் ஒரு கார் கூட விற்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாகக் கார் டீலர்ஷிப்கள் முழுமையாக மூடப்பட்ட காரணத்தால் கார் விற்பனை மொத்தமாகப் பூஜ்ஜியமானது.

சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்

சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்

இதேபோல் ஷாங்காய் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஏப்ரல் மாதத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 90.7% சரிந்துள்ளது.

மே மாத

மே மாத

சீன பொருளாதார நடவடிக்கைகள் மே மாதத்தில் ஓரளவு மேம்பட்டு வருவதாகக் குறிப்பாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு வர்த்தகம் சூடுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்,

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

சீனாவின் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசின் ஜீரோ கோவிட் பாலிசி அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை. இதனால் ஜி ஜின்பிங் பதவி பறிபோகும் நிலை உருவான நிலையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்துள்ளது சீன அரசு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

No cars were sold in April month; Lockdown collapsed Shanghai City

No cars were sold in April month; Lockdown collapsed Shanghai City ஒரு கார் கூட விற்கவில்லை.. ஷாங்காய் நகரத்தைப் புரட்டிப்போட்ட லாக்டவுன்..!

Story first published: Tuesday, May 17, 2022, 19:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.