காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்தவர் கெங்கமுத்து. இவர் அந்த பகுதியில் ஒலிபெருக்கி அமைப்பாளராக இருந்து வருகிறார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கடந்த 14ஆம் தேதி முதல் காணவில்லை.
அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து, அந்த உடலை மீட்டத்தில் அது கெங்கமுத்து சடலம் என்பதை உறுதி செய்தனர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.