சென்னை: கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் காலை முதல் சிபிஐ சோதனை நடத்தும் நிலையில் முதல் தகவல் அறிக்கையின் நகல் வெளியாகி உள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக விசா பெறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.