மும்பை: நடிகைக்கு சொகுசு கார் பரிசளித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் வாலிபர். நடிகை ராக்கி சாவந்த், ரித்தேஷ் என்பவரை காதலித்து மணந்தார். தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ஆதில் கான் என்பவருடன் ராக்கி சாவந்த் நட்பாக பழகி வந்தார். ஆதில் கான், ராக்கி சாவந்தை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் திடீரென ராக்கி சாவந்துக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை ஆதில் கான் பரிசளித்தார். அத்துடன் தனது காதலையும் அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது காதலை ராக்கி சாவந்த் ஏற்றுக்கொண்டார். இது குறித்து ராக்கி கூறும்போது, ‘கார் பரிசாக கொடுத்து காதலை ஆதில் சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. இனிமேல் காதலன்கள் காதலிகளை புரபோஸ் செய்வதாக இருந்தால் கார் பரிசளிக்கட்டும்’ என்றார்.