குரூப்-1 தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியிலும், குரூப்-2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியிலும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், 5 ஆயிரத்து 529 பணியிடங்களுக்கான குருப் 2, 2ஏ தேர்வு திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் காலை 9 மணிக்குப் பின் வருபவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஹால் டிக்கெட் உடன் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் கூறினார்.