கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளதால், துறைமுகங்களில் 18 லட்சம் டன் கோதுமை தேங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டு வீசிய வெப்ப அலையால் கோதுமை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
உலகின் முன்னனி கோதுமை ஏற்றுமதியாளரான ரஷ்யா, உக்ரைன் போரால் ஏற்றுமதியை குறைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக துறைமுகங்களில் வைக்கப்பட்டுள்ள 18 லட்சம் டன் கோதுமையை உள்ளூர் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.