உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ நிறுவனத்தின் முதல் காலாண்டில் அதன் லாபம் 82 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையே என்றும் தெரிவித்துள்ளது.
சவுதி அராம்கோவின் இந்த அறிவிப்புக்கு பிறகு இது உலகின் மிக உயர்ந்த மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
கச்சா எண்ணெய்க்கு தள்ளுபடி கொடுத்த சவுதி.. ஆனா அமெரிக்காவுக்கு மட்டும் இல்லை..!
என்ன காரணம்?
சவுதி அராம்கோவின் இந்த அறிவிப்பானது சவுதி அரசின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து சந்தையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், எரிபொருள் விலையும் அதிகரித்து வருகிறது. இதுவே ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு வேகமான வளர்ச்சியினை தூண்டியுள்ளது.
வருவாய் வளர்ச்சி
சவுதி அராம்கோவின் நிகர வருவாய் வளர்ச்சியானது 39.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டில் 21.7 பில்லியன் டாலராகவும் இருந்தது. இது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், விற்பனையும் அதிகரித்துள்ளதே காரணம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உபரி
இதற்கிடையில் கடந்த ஆண்டினை காட்டிலும் 36 சதவீதம் வருவாய் வளர்ச்சியினை கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் நிறுவனம் 15 பில்லியனுக்கும் சமமான உபரியினை வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சவுதி அராம்கோ நிறுவனம் சவுதியின் கிரீடம் என அழைக்கப்படுகிறது. இது சவுதியின் முதன்மை வருவாய் ஆதாரமாகவும் உள்ளது.
ஆப்பிளை ஓரம் கட்டிய அராம்கோ
ஆக சவுதி அராம்கோவின் வளர்ச்சி விகிதமானது நாடு சரியான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.
இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான ஆப்பிள் சந்தை மூலதனம் 2.37 டிரில்லியன் டாலராகும். இதே அராம்கோவின் மூலதனம் 2.42 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
சவாலான நிலையிலும் லாபம்
அராம்கோவின் இந்த லாப அதிகரிப்பு இதன் பங்கு வெளியீடு 2019ல் செய்த பிறகு, வரலாறு காணாத அளவுக்கு முதல் முறையாக லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் வருட நிகரலாபம் கடந்த 2021ல் 124 சதவீதம் அதிகரித்துள்ளது. இது சவுதி அராம்கோ நிறுவனம் மீது கடந்த ஆண்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. எனினும் அதனையும் தாண்டி சவுதி அராம்கோ நிறுவனம் பெரும் லாபம் கண்டுள்ளது.
Saudi Aramco reported net profit jump 82% as oil prices surge
Amid rising crude oil prices, Saudi Aramco reported a 82 percent increase in profits in the first quarter.