உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க ‘நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த பையனூரில் சாய் பல்கலைக்கழகத்தில் கட்டிடத்தை திறந்து வைத்து, புதிய கட்டிடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய விழுக்காட்டைக் காட்டிலும் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், தமிழக அரசு உயர்கல்வியில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.