முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் அவர்களின் மகனும், லோக்சபா உறுப்பினனுமான கார்த்தி சிதம்பரம்-த்திற்குச் சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனை துவங்கிய அடுத்த சில மணிநேரத்தில் கார்த்தி சிதம்பரம் அவரது டிவிட்டர் பக்கத்தில், “நான் கணக்கை மறந்துவிட்டேன் இது எத்தனாவது சோதனை, கண்டிப்பா இதற்குக் கணக்கு இருக்கும்.. என டிவீட் செய்தார்.
வரலாற்று உச்சத்தைத் தொட்ட கோதுமை விலை.. மத்திய அரசு அறிவிப்பின் எதிரொலி..!
கார்த்தி சிதம்பரம்
2010 மற்றும் 2014 க்கு இடையில் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய சில நிறுவனங்களுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கார்த்தி சட்டவிரோதமாக ரூ. 50 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு 250 சீனர்களுக்கு விசா வழங்க செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பிடிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4வது முறை சோதனை
2017-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஐ, அமலாக்க துறை போன்ற அமைப்புகள் நான்காவது முறையாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துகின்றன.
9 இடம்
இந்த முறை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் 3 இடம், மும்பையில் 3 இடம், கர்நாடகா, பஞ்சாப், ஓடிஷா ஆகிய மாநிலத்தில் தலா ஒரு இடத்தில் என மொத்தம் 9 இடத்தில் காலை முதல் சோதனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
சிபிஐ சோதனை
இன்றைய சோதனையும் கார்த்தி மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் சிபிஐ நடத்திய சோதனைகளின் அடிப்படையிலேயே நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோதமாகத் திருப்திப்படுத்தப்பட்டதாகப் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
சென்னை
இதற்கிடையில் கார்த்தி சிதம்பரம் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்படும் நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை வீட்டில் போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
P Chidambaram’s son Karti Chidambaram premises raids by CBI with new illegal gratification case
P Chidambaram’s son Karti Chidambaram premises raids by CBI with new illegal gratification case சிபிஐ ரெய்டு: கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு.. 9 இடத்தில் சோதனை..!