பொதுவாக சிறுநீரக கோளாறுகளை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்று சிறுநீர் துர்நாற்றம்
இது சங்கடத்தை குறிப்பாக பெண்களிடம் அதிக சங்கடத்தை உண்டாக்க செய்யும். இதை எளியமுறையில் கூட போக்க முடியும்.
தற்போது துர்நாற்றத்தோடு வெளியேறும் சிறுநீரை எப்படி எளிய முறையில் போக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
- ஒரு நபர் நாள் ஓன்றுக்கு 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிப்பது தொற்றுகள் இருந்தால் அதை அழிக்க உதவும். இது நீரிழப்பு பிரச்சனையை தீர்த்து, சிறுநீர் துர்நாற்றத்தை குறைக்கிறது. ஏனெனில் நீரிழப்பும் சிறுநீர் துர்நாற்றத்தை உண்டு செய்யும்.
- சிறுநீர் துர்நாற்றத்தை போக்க புரோபயாட்டிக் உதவும் அதற்கு தினசரி உணவில் சேர்த்துகொள்வது நன்மை பயக்கும்.
- க்ரான்பெர்ரி சிறுநீர்கோளாறு குறிப்பாக சிறுநீர் பாதை நோய்த்தொற்று என்றால் அதற்கு தீர்வு இதுதான். இது சிறுநீரில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி, உங்கள் சிறுநீர் பாதையை சுத்தம் செய்யும்.
- சிறுநீரில் துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் அதிகரிப்பது தான். உணவில் வைட்டமின் சி அதிகம் சேர்ப்பதன் மூலம் நச்சுவை வெளியேற்றலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- கரீன் டீயில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் நல்ல அளவு காஃபின் உள்ளது. இது நெஃப்ரான்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க உதவுகிறது.
- பூண்டு போன்ற மசாலா மற்றும் வாசனை பொருள்களை சேர்க்கலாம். எனினும் தினசரி இதன் அளவு அதிகரிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்.