சிவகங்கையில் கிடங்கில் கோதுமை மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்.!

சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு உணவு நிறுவன கிடங்கில் கோதுமை மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில், 2 டன் அளவிலான கோதுமை எரிந்து வீணாகியது.

காரைக்குடி கிடங்கில் இருந்து 240 கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தனியார் லாரி ஒன்று சிவகங்கை கிடங்கிற்கு அதிகாலை நான்கரை மணியளவில் வந்துள்ளது.

ஓட்டுநர் இறங்கி சென்று ஓரிடத்தில் தூங்கிவிட்ட நிலையில் சுமார் 6 மணியளவில் லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவல் அறிந்து சென்ற சிவகங்கை நகர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, லாரியில் எவ்வாறு தீப்பிடித்தது, யாரேனும் தீவைத்தார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.