சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!

இணையதளம் கண்டிப்பாக ஒரு பாதுகாப்பான சேவைதான். ஆனால் அதில் மனிதர்கள் எளிய இலக்காக மாறிவிடுகிறார்கள். அதனால் பல மோசடிகள் நடைபெறும் இடமாக அல்லது சேவையாக ஆன்லைன் மாறிவிட்டது.

அண்மையில் சீனாவில் நடைபெறும் டாப் 5 மோசடிகள் பட்டியலை அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது.

ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?

பிரஷிங்

பிரஷிங்

இ-காமர்ஸ் இணையதளம் ஒன்று தொடங்குவது. அதில் குறைந்த விலையில் பல பொருட்களைப் பட்டியலிடுவது. ஆன்லைனில் பணத்தை பெறுவது. பின்னர் அந்த பொருளை டெலிவரி செய்யாமல் ஏமாற்றுவது அல்லது பல்வேறு மோசடி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய சொல்லி வாடிக்கையாளர்களை வற்புறுத்துவது.

தவறான முதலீடு

தவறான முதலீடு

அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஒரு முதலீடு திட்டம் பற்றி கூறுவது. அதில் பல பேர் முதலீடு செய்த உடன் மொத்த பணத்தையும் ஏமாற்றிக்கொண்டு ஓடுவது.

ஏமாற்று கடன் திட்டங்கள்

ஏமாற்று கடன் திட்டங்கள்

உடனடி கடன் கொடுப்பது, கடன் வாங்கிய பிறகு அதிக வட்டி வசூலிப்பது, கட்ட முடியாமல் போகும் போது வாங்கியவர்களை மிரட்டுவது.

வாடிக்கையாளர் சேவை ஆள்மாறாட்டம்
 

வாடிக்கையாளர் சேவை ஆள்மாறாட்டம்

வாடிக்கையாளர் சேவை நிறுவனம் போல பொருட்களை வாங்குவது, பின்னர் கடனுக்குப் பொருட்களை வாங்குவது. ஒரேயடியாக பலபேரிடம் பொருட்களை வாங்கிவிட்டு ஏமாற்றிவிடுவது.

இந்தியா

இந்தியா

மேலே கூறியது போன்று இந்தியாவில் பல மோசடிகள் நடக்கிறது. இப்படி அதிக மோசடி நடைபெறும் நகரமாக தெலுங்கானாவின் ஹைதராபாத் உள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 50,035 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 11.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

வங்கி மோசடிகள்

வங்கி மோசடிகள்

இந்தியாவில் அதிகம் இப்போது நடப்பது ஆன்லைன் வங்கி மோசடிகளாக உள்ளன. ஓடிபி மோசடிகள், டெபிட் / கிரெடிட் கார்டு மோசடிகள், ஏடிஎம் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்த மோசடிகளை தவிர்க இந்திய வங்கி நிறுவனங்களும் பல்வேறு வகையில் வாடிக்கையாளர்களை எச்சரிக்கின்றன. இருந்தாலும் இதுபோன்ற புகார்கள் குறைந்தபாடில்லை.

பிற மோசடிகள்

பிற மோசடிகள்

இவை தவிர, சைபர் குற்றவாளிகள் ஒரே எண்ணில் இரண்டு சிம் கார்டு, ஏமாற்றுதல், தரவு மீறல், சேவை மறுப்பு, வைரஸ், ரேன்சம்வேர் என பல பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

நீங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைத்தால், உடனே உங்கள் கடவுச்சொற்கள் அனைத்தையும் மாற்றி, சந்தேகத்திற்குரிய மென்பொருளை நீக்கவும். தேவையற்ற கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக கிரெடிட் கார்டு நிறுவனத்தை அழைக்கவும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆன்லைன் மோசடிகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China’s Top 5 Online Fraud In 2022. How It Related With India?

China’s Top 5 Online Fraud In 2022. How It Related With India? | சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவை தான்.. இந்தியாவுக்கு ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!

Story first published: Tuesday, May 17, 2022, 23:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.